News April 5, 2025
புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணி நிறுத்தம்

சென்னையில் 15 ஆக உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே, புதிய மண்டலங்களை உருவாக்க முடியாது என்பதால் அதற்கான பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News April 6, 2025
மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் உள்ள ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 6) மாமூல் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி அப்துல் ரகுமானிடம் மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக 120ஆவது வட்ட செயலாளர் ஐஸ்அவுஸ் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூர்த்தியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News April 6, 2025
சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 30 தினங்களுக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, நிகர சொத்துவரியில் 5% அல்லது அதிகபட்சம் ரூ.5000 ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2025-26ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு தொடங்கியுள்ளதால், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க