News August 5, 2024
புதிய போலீஸ் கமிஷனர்: ஒரு பார்வை

திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனராக, சென்னை ஆயுதப்படை ஐ.ஜி லட்சுமி பொறுப்பேற்றார். இவர் 1997ல் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யானார். விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றினார். நேர்மையான, துணிச்சல் மிக்க அதிகாரியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் சொந்தப்பணி காரணமாக விருப்ப ஓய்வு கோரிய போது அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மீண்டும் பணிக்கு வந்தார்.
Similar News
News February 6, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.06) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News February 6, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பல்லடம் நகர், மாதப்பூர், வெங்கிட்டாபுரம், மங்கலம் ரோடு, அனுப்பபட்டி, வீரபாண்டி, முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், சின்னக்கரை, இடுவம்பாளையம், அண்டிபாளையம், இடுவாய் கிழக்கு, சின்னாண்டிபாளையம், கிழக்கு, சின்னியகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 6, 2026
திருப்பூர்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


