News July 6, 2025
புதிய பாமக நிர்வாகிகள்: ஜூலை 8 செயற்குழு கூட்டம்

நேற்று (ஜூலை 5) பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டு, 21 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த மாற்றங்களைச் செய்தார். இந்நிலையில், ஓமந்தூரில் ஜூலை 8 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாமக செயற்குழுக் கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கௌரவ தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
இ- ஸ்கூட்டர் பெற மானியம்(2/2)

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
விழுப்புரத்தில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <
News August 21, 2025
விழுப்புரத்தில் நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சாவித்திரி 34, இவரது வீட்டின் உள் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 5 சவரன் செயின், ரூ. 20,000 நேற்று காணாமல் போனது, பீரோவை உடைக்காமல், நகை மற்றும் பணம் மாயமாகியுள்ளது. சந்தேகத்தின் பேரில், இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.