News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 29, 2026
நெல்லை: லாரி மோதி சம்பவ இடத்தில் பலி

நெல்லையை சேர்ந்தவர் பெரியசாமி (46). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்தார். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு டூவீலரில் சென்று விட்டு திரும்பி வந்துள்ளார். ராமதாஸ்புரம் பகுதியில் வந்த போது பின்னல் வந்த கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆவடி போலிசார் உடலை மீட்டு திருவள்ளூர் GH-க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News January 28, 2026
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜன. 28 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News January 28, 2026
நெல்லை புத்தகத் திருவிழா: கலெக்டர் ஆலோசனை

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பொருநை புத்தகத்தில் உள்ள பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி 28 மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


