News November 21, 2025
புதிய தொழிலாளர் சட்டங்கள்: முக்கிய அம்சங்கள் 1/2

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் படி: *ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சலுகைகள் (சமூக பாதுகாப்பு, சம்பளத்துடன் விடுப்பு, ஒராண்டுக்கு பின் gratuity) *Gig, Platform பணியாளர்களுக்கு அங்கீகாரம். *அனைத்து பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு *எத்துறையாக இருந்தாலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம். *அனைவருக்கும் இலவச ஹெல்த் செக்-அப்.
Similar News
News November 22, 2025
மீண்டும் ரெக்க கட்டி பறக்க போகும் ‘அண்ணாமலை’

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்டாகி வருகிறது. மக்களும் பழைய படங்களை மீண்டும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுகின்றனர். அந்த வரிசையில் இப்போது ரஜினியின் அண்ணாமலை படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி , டிசம்பர் 12-ம் தேதி இப்படம் வெளியாகிறது. அசோக்கிற்கு எதிரான அண்ணாமலையின் போராட்டத்தை பார்க்க ரெடியா?
News November 22, 2025
சதுரங்கவேட்டை பாணியில் DMK ஆட்சியை பிடித்தது: ராஜூ

மெட்ரோ ரயில் வருவதற்கு திமுக அரசு விரும்பவில்லை என செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். 2026 தேர்தலுக்காக திமுக அரசு மெட்ரோ குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்த அவர், கடந்த தேர்தலில் சதுரங்க வேட்டை பாணியில் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மெட்ரோ திட்டத்தை வைத்து நாடகமாடி மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
News November 22, 2025
BREAKING: இங்கெல்லாம் கனமழை கொட்டும்.. ALERT

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த <<18348127>>தாழ்வு பகுதி உருவாகக்கூடும் <<>>என IMD தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?


