News February 27, 2026
புதிய துணை மின் நிலையம்: CM ஸ்டாலின் திறந்து வைத்தார்!

குளித்தலை அருகே நெய்தலூர் பஞ்சாயத்து, சின்னபனையூரில் ரூ. 9.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இப்புதிய மின் நிலையம் மூலம் அப்பகுதி மக்களின் மின் தேவை பூர்த்தியாகும்.
Similar News
News February 28, 2026
கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 28, 2026
கரூரில் அதிமுகவினர் வீடு வீடாக பரப்புரை!

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் “இல்லம் தோறும் இரட்டை இலை” என்ற லட்சிய பயணத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் நேற்று இரவு கழக நிர்வாகிகளோடு வீடு வீடாக சென்று மக்களிடம் சந்தித்து வழங்கப்பட்டது.
News February 28, 2026
கரூர் அருகே இளைஞர் துடிதுடித்து பலி!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பொன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(42). இவர் அருகம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான மாட்டு கொட்டகைக்கு சென்று புதிதாக பல்பு மாட்டும் பணியை மேற்கொண்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


