News December 16, 2025
புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம்

புதிய தலைமை தகவல் ஆணையராக (Chief Information Commissioner) ராஜ்குமார் கோயல் பதவியேற்றுள்ளார். இவர் PM மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனைக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 1990-ம் ஆண்டு பேட்ச் அருணாச்சல பிரதேசம்- கோவா- மிசோரம்- யூனியன் பிரதேசங்கள் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஆவார். சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
Similar News
News December 18, 2025
பொதுகூட்டத்திற்கு தாமதமாக வரும் விஜய்

ஈரோடு தவெக பொதுக்கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும் என கூறப்பட்டது. ஆனால், விஜய் இன்னும் பொதுக்கூட்ட திடல் பகுதிக்கு வரவில்லை. வழிநெடுகிலும் விஜய்யை தவெகவினர் வரவேற்றதால், அவரது வருகையில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கரூர் துயருக்கு விஜய் தாமதமாக வந்தது காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் மீண்டும் தாமதமாக வந்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
News December 18, 2025
ராக்கெட் வேகத்தில் உச்சம்.. விலை மொத்தம் ₹14,000 உயர்வு

தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹224-க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹2,24,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹14,000 அதிகரித்துள்ளது.
News December 18, 2025
அஸ்வின் Vs CSK ரசிகர்கள்.. வெடித்தது மோதல்

SM-ல் கடந்த சில நாள்களாக அஸ்வினுக்கும், CSK ரசிகர்களுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. ஏலத்தில் யாரையெல்லாம் CSK வாங்கும் என்ற தகவலை கசியவிட்டு, வேண்டுமென்றே விலையை ஏற்றிவிட்டதாக ரசிகர்கள் சாடினர். தற்போது யூடியூப்பிலும், CSK-வின் வீரர்கள் தேர்வை அஷ்வின் மறைமுகமாக விமர்சித்தார். CSK மீது எதற்காக வன்மம் பரப்புகிறீர்கள் என்ற கேள்விக்கும், அஸ்வின் Haha Smiley பதிவிட்டதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.


