News September 7, 2025
புதிய ஆழ்துளை கிணறு அடிக்கல் நாட்டு விழா

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். உடன் ஊராட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Similar News
News September 8, 2025
புதுகை மாணவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்

சென்னையில் மண்டல அளவில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் எனது புதுக்கோட்டை மாணவி ஜீவா தங்கப்பதக்கம் வென்று முதலமைச்சர் கோப்பை மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாநில போட்டியில் வென்று பதக்கங்களைப் பெற அவருக்கும் அவரது பயிற்றுநர் அப்துல் காதருக்கும் சக மாணவர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News September 8, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியீடு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.7) கடந்த 24 மணி நேரத்தில் அறந்தாங்கி பகுதியில் 61.8 மி.மீ, ஆயிங்குடி பகுதியில் 62.4 மி.மீ, நாகுடி பகுதியில் 68 மி.மீ, ஆவுடையார் கோவிலில் 14.8 மி.மீ, மணமேல்குடி 67 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News September 8, 2025
புதுகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுகை மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <