News July 19, 2024
புதிய ஆட்சியருக்கு வரவேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக சந்திராகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் துணை ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
Similar News
News May 8, 2025
ராணிப்பேட்டை +2 மாணவர்கள் கவனத்திற்கு

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
ராணிப்பேட்டையில் மதுபோதையில் தகராறு

பள்ளூரில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது இங்கு நேற்று இரவு கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த கோவர்தனன், பள்ளூரை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராஜை கோவர்தனன் கை, கட்டையால் தாக்கினார். காயமடைந்த செல்வராஜ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து இன்று கோவர்த்தனனை கைது செய்தனர்
News May 7, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மே-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100