News February 26, 2026

புதிதாக 7 ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 7 துணை சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். குறிப்பாக வீரசோழனில் சுமார் ரூ.1.20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டையில் ரூ.60 லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கே புதூரில் ரூ.45 லட்சம் மதிப்பில் சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.

Similar News

News March 1, 2026

விருதுநகர்: 300 யூனிட் FREE மின்சாரம் பெறுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 1, 2026

ஸ்ரீவி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிமுத்து(48). கூலித்தொளி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டில் சுவரை நனைத்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து ஒயரை எடுத்த போது மின்சாரம் பாய்ந்து மீனாட்சி முத்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

ராஜபாளையம்: வீட்டின் பூட்டை உடைத்து 70கி நகை திருட்டு

image

ராஜபாளையம் அருகே செண்பகத்தோப்பு சாலை ராம்நகரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவா் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவர் குடும்பத்துடன் தென்காசிக்குச் சென்ற நிலையில் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 70 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இது குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!