News September 3, 2024
புதிதாக 16 உதவி ஆய்வாளர்கள் நியமனம்

தமிழக காவல்துறையில் புதிதாக 444 எஸ்ஐக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு காவல் நிலையம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்திற்கு 10 காவல் உதவி ஆய்வாளர்களும், மாநகரத்திற்கு 6 காவல் உதவி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 காவல் உதவி ஆய்வாளர்களும் அந்தந்த காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Similar News
News August 23, 2025
சேலம்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

சேலம் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 23, 2025
சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்டம், காமலாபுரம் சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.23) இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் விமான நிலையம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
News August 23, 2025
BREAKING: ரேபிஸ் நோய்க்கு சேலத்தில் இருவர் பலி!

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.