News January 26, 2026

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் 28-ம் தேதி(புதன்கிழமை) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Similar News

News February 20, 2026

வரலாற்றில் இன்று

image

1986 – நடிகர் கலையரசன் பிறந்ததினம்.
1987- அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில அந்தஸ்தை பெற்றன.
1990 – நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பிறந்தநாள்.
2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர்.
2011 – பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்த நாள்.

News February 20, 2026

கண் பார்வையை கூர்மையாக்க இதுதான் பெஸ்ட்!

image

டிஜிட்டல் யுகத்தில் 6-வயதிலேயே குழந்தைகள் கண்ணாடி போடுவதை பார்க்கமுடிகிறது. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தின் மூலமாக கண் பார்வை பாதிப்பை தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கண் பார்வையை கூர்மையாக்க உதவும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளின் பட்டியலை மேலே போட்டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பாருங்கள்…

News February 20, 2026

விஜய்யுடன் கூட்டணி என்பது பைத்தியக்காரத்தனம்: காங்.,

image

தவெகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு தரப்பு கூறியதால், இண்டியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விஜய்யுடன் காங்கிரஸ் சேர்ந்தால் இருவரும் பாதாளத்திற்கு செல்ல வேண்டியதுதான் என காங்., மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம் என்றும், முதலில் விஜய் ஜெயிச்சு காட்டட்டும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!