News January 21, 2026
புதன்கிழமையில் செல்வத்தை குவிக்கும் மகாலட்சுமி வழிபாடு

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று வீட்டில் மகாலட்சுமிக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து, பிரசாதம் படைத்து வழிபடுங்கள். பூஜை செய்யும்போது, லட்சுமி அஷ்டோத்திரம் மந்திரங்களை சொல்லி வணங்கலாம். இதனால், குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.
Similar News
News January 27, 2026
எனர்ஜி தரும் ABC ஜூஸ்!

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கவும். வடிகட்டத் தேவையில்லை. வேண்டுமெனில் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கொள்ளலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. SHARE IT.
News January 27, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $45.51 (இந்திய மதிப்பில் ₹4,173) உயர்ந்து $5,030.18-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி $3.78 உயர்ந்து $107.08 ஆக உள்ளது. இதனால், இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 30 நாள்களில் மட்டும் $650 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 27, 2026
விஜய் அரசியலுக்கு புதுசு… திருந்திடுவார்: குஷ்பு

அதிமுக பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக விஜய் வைத்த விமர்சனத்துக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். தம்பி அரசியலுக்கு புதுசு எனவும், காலம் காலமாக இருக்கும் கட்சியான அதிமுக யாருடனும் சரணடைய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் விசில் அடிக்கும் போது வீராப்பில் வார்த்தைகள் வந்துவிடும். தம்பி திருந்திடுவார். தவெகவின் வாக்கு சர்வேயை வைத்து ஒன்றும் செய்யமுடியாது எனவும் விமர்சித்துள்ளார்.


