News January 19, 2025
புண்ணைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பிப்ரவரி 3-ம் தேதி காலை 7.25 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. பின்னா், 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் முதல் கால யாக பூஜையும், பிப்ரவரி-10 காலை 9.30-10.30 க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Similar News
News March 6, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.6) இரவு 10 முதல் நாளை (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் – ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவுத்துறையில் நடைமுறைப்படுத்தியுள்ள ஸ்டார் (STAR) 3.0 திட்டத்தின் மூலம் ஆவணங்கள் பதிவேற்றம் செய்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம் வரும் 7-ம் தேதி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய நில ஆவணங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 440 சங்கங்கள் உள்ளன. சங்கங்களுக்கு பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளருக்கு பல்வேறு ஊக்கத்தொகை சிறப்பு தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.


