News December 6, 2025

புடின் ருசித்த இந்திய உணவுகள்

image

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த அதிபர் புடின், பல இந்திய உணவுகளை ருசித்து சாப்பிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி இல்லத்தில் அவருக்கு சிறப்பு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. மோமோஸ், பனீர் ரோல், உருளைக்கிழங்கு தந்தூரி, முருங்கை சூப், பாலக் கீரை, கஷ்மீர் ஸ்டைல் வால்நட் சட்னி, பருப்பு குழம்பு, நாண் ரொட்டி, பாதாம் அல்வா, புலாவ், பிஸ்தா குல்ஃபி என இந்திய சைவ உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News March 4, 2026

நெட் இல்லாமலும் Gmail செக் பண்ணலாம்; இதோ Trick

image

முக்கியமான மெயிலை செக் பண்ணும்போது இண்டர்நெட் கட் ஆகிடுச்சுனா? கவலையவிடுங்க. Gmail-ல் மெயில்களை Offline-லயும் Access பண்ணலாம். ➤உங்கள் Laptop-ல் Gmail-ஐ Login செய்யுங்கள் ➤செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்து ‘Quick Settings’ என்ற ஆப்ஷனை அழுத்துங்க ➤See All Settings என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதை க்ளிக் செய்தால் Offline என்ற ஆப்ஷன் வரும் ➤அதற்குள் சென்று Enable செய்யுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News March 4, 2026

பள்ளி மாணவி குழந்தை பெற்றார்

image

தெலங்கானாவில் 16 வயது மாணவி குழந்தை பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வயிற்று வலியால் தவித்துவந்த அந்த மாணவி, ஹாஸ்பிட்டலுக்கு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது வலி மேலும் அதிகரிக்க, ஹாஸ்பிடலின் பாத்ரூமிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் பதறிப்போன மாணவியும் அவரது தாயாரும், அக்குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இது போலீசுக்கு தெரியவர, விசாரணை நடந்து வருகிறது.

News March 4, 2026

தங்கம் விலை: ஏன் இந்தியாவில் தொடர்ந்து சரிகிறது தெரியுமா?

image

உலக மார்க்கெட்டில் தங்கம் விலை ஏறும் நிலையில், இந்தியாவில் விலை சரிய 2 முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். போர் பதற்றத்தால், பாதுகாப்பான முதலீட்டுக்காக US டாலர்களில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்வதால், விலை வீழ்ச்சியடைவதாக கூறுகின்றனர். அதே போல, விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், மக்களிடையே தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளதாலும், விலை சரிந்திருக்க கூடும் எனவும் கணிக்கின்றனர்.

error: Content is protected !!