News December 8, 2025

புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

Similar News

News December 18, 2025

இந்த மோசடியில் மாட்டிக்காதீங்க.. SBI எச்சரிக்கை!

image

பரவி வரும் மோசடி மெசேஜ்கள் குறித்து SBI எச்சரித்துள்ளது. YONO SBI-ல் Reward பாயிண்ட்ஸ் தருவதாக Whatsapp உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் போலியான மெசேஜ்கள் வருகிறதாம். அதை கிளிக் செய்தவுடன் உங்களின் தகவல்களை மோசடிக்காரர்கள் திருடிவிடுகிறார். இதுபோன்ற மெசேஜ்களை நம்பவேண்டாம் எனவும் இந்த மெசேஜ்கள் வந்தால், சைபர் கிரைம் 1930 அல்லது <>cybercrime.gov.in<<>> இணையதளத்தில் புகார் அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

News December 18, 2025

பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை

image

பால் கொள்முதல் மற்றும் விற்பனையை சீர்படுத்தவும், பால் கலப்படத்தை தடுக்கவும் புதிய கொள்கை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்த கொள்கை மூலம் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது, உற்பத்தியாளர்களே நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 18, 2025

BREAKING: அண்ணாமலை கைது

image

திருப்பூரில் நடைபெற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!