News January 12, 2026
புஞ்சைப்புளியம்பட்டி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

புஞ்சைப்புளியம்பட்டி புதுரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்தனர். இது தொடர்பாக ரகு, சுரேஷ் பாபு, விஜயகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
ஈரோடு அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது

பவானிசாகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பவானிசாகர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி எரங்காட்டூர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். மேலும் கடை உரிமையாளர் தாஹிரா பானு என்பவரை கைது செய்த போலீசார், 4000 ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
News January 25, 2026
ஈரோடு: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.<
News January 25, 2026
ஈரோடு: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)


