News January 11, 2025
புகையில்லா போகி; கலெக்டர் வேண்டுகோள்

போகிப் பண்டிகைக்கு பழைய பொருள்களை எரிப்பதாக கூறி நெகிழி, டயா் ஆகியவற்றை எரிக்கும் போது நச்சுப் புகை வெளியேறுவதால் சுற்றுச் சூழலும், பொதுமக்களின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் சுவாசப் பிரச்னையும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாசு இல்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தேனி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News February 17, 2026
தேனி அருகே ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தேனி மாவட்டம், குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டி. இவருக்கு ஞானேஸ்வரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தைக்கு கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. இதையடுத்து நேற்று திடீரென குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து ஜெயமங்களம் போலீசார் வழக்குப்பதிவு.
News February 17, 2026
தேனி: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தேவாரம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேவாரம், மீனாட்சிபுரம், மூணான்டிபட்டி, பி.ஆர். புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைசேரி பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


