News March 8, 2025
புகழ் நிறைந்த புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

கரூர்,வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய திருக்கோயில்.இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இங்கு வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News August 24, 2025
கரூர்:குழந்தைகளுக்கு மாதம் 2000 அறிவித்தார் கலெக்டர்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாத்திடும் வகையில் அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கல்லூரி கல்வி மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவரிடம் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE பண்ணுங்க
News August 24, 2025
தக்காளி விலை திடீர் உயர்வு

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால்,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.
News August 23, 2025
கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க