News May 4, 2024

புகழ்பெற்ற வேலூர் கோட்டையின் சிறப்புகள்!

image

வேலூர் கோட்டை விஜயநகரப் பேரரசால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 133 ஏக்கர் பரப்பளவில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றி அமைந்துள்ளது. இது பல மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1806 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முதலில் கிளர்ச்சி இக்கோட்டையிலேயே நடைபெற்றது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது.

Similar News

News November 20, 2024

காவல்துறை இரவு ரோந்து பணி வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 20, 2024

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

image

அணைக்கட்டு பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், இளமதன், சின்னராசு, ஆகிய மூன்று பேர் கடந்த 16ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று (நவ 19) வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சிறுமியை வன்கொடுமை செய்த மூன்று பேரையும் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

News November 20, 2024

 யானை தந்தம் பதுக்கிய வழக்கில் 9 பேர் அதிரடி கைது

image

வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள ஒரு வீட்டில் யானை தந்தம் ஒதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் யானைத் தந்தம் பதுக்கி வைத்திருந்த பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சரத்குமார் (32), சம்பத் (57), மணிகண்டன் (37), குமார் (37), அனீப் (52), பழனி (68), தனபால் (63), ரவி (52), தரணிகுமார் (57) ஆகிய 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.