News December 19, 2024
புகழாரம் சூட்டிய தேனி எம்.பி

தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் அவரது x தளப்பக்கத்தில் ”பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாள் இன்று 19.12.2024 நினைவு கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடும், இனமானமும், பகுத்தறிவும் புகட்டிய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்த நாளை, அவரது புகழைப் போற்றி சிறப்பிப்போம்” என புகழாரம் சூட்டினார்.
Similar News
News March 11, 2026
தேனி; கட்சி தாவிய முக்கியப் புள்ளி

தேனி மாவட்டம், கம்பம் அதிமுக ஒன்றிய பொருளாளரான வழக்கறிஞர் பரணி இன்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் அவருக்கு MLA மகாராஜன், திமுக கட்சி வேஷ்டியை கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது பேரூர் செயலாளர் சரவணன், பேரூர் துணைச் செயலாளர் தங்கமாரி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News March 11, 2026
தேனி : திருமணமாகாத விரக்தியில் இளைஞரின் விபரீத முடிவு

பெரியகுளம் அருகே தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). இவருக்கு தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாத காரணத்தினால் மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் நேற்று முன்தினம் (மார்.9) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 10, 2026
தேனி: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


