News December 30, 2025
பீரியட்ஸ் பிரச்னை பெருசாகும்: பெண்களே NOTE THIS

PCOS, PCOD அறிகுறிகள் பற்றி சரியாக தெரியாததால் இதனை சில பெண்கள் கவனிப்பது கிடையாது. அதன் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள். ➤சீரற்ற மாதவிடாய் சுழற்சி ➤அதிகமாக உடல் எடை கூடுவது/குறைவது ➤கருப்பை கட்டிகள் ➤சரும பிரச்னைகள் ➤சோர்வாகவே இருத்தல் ➤தூக்கமின்மை ➤அதீத ரத்த போக்கு. சில சமயங்களில் PCOS வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டாது. எனவே, 8 மாதங்களுக்கு ஒருமுறை Ultra Sound எடுப்பது நல்லது. SHARE THIS.
Similar News
News January 7, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை கண்டித்துள்ள CPM

திருப்பரங்குன்றம் <<18776534>>தீர்ப்பு <<>>நீதி பரிபாலன முறை எதிரானது CPM மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை மனுதாரரும் சொல்லவில்லை, கோர்ட் தீர்ப்பிலும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார். TN அரசை குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கோர்ட் செயல்பட்டுள்ளதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News January 7, 2026
தேவ்தத் படிக்கல் படைத்த அரிய சாதனை

விஜய் ஹசாரே கோப்பையில்(VHT) 6 போட்டிகளில் 4 சதம் அடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார் தேவ்தத் படிக்கல். அதுமட்டுமல்லாமல் VHT-ல் 600 ரன்களுக்கு மேல் 3 முறை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார். இந்த சாதனையை விராட், சச்சின் போன்ற ஜாம்பவான்களே படைத்தது இல்லை. இதனால் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவிக்கும் படிக்கலுக்கு இனியாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News January 7, 2026
ஜனநாயகன் ரிலீஸ்.. செங்கோட்டையன் எச்சரிக்கை

‘ஜனநாயகன்’ ரிலீஸை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். <<18779627>>தணிக்கை சான்றிதழ் சிக்கல்<<>> குறித்த கேள்விக்கு அவர், ஜனநாயகன் ரிலீஸில் தடையை ஏற்படுத்தக் கூடியவர்களுக்கு அது எவ்விதத்திலும் வலுசேர்க்காது என்றும் நாளைய CM விஜய்யின் படத்தை தடுப்பது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார். அப்படி யாராவது எண்ணினால் அது அவர்களுக்கு பாதகமாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


