News January 7, 2025
பி.கீரந்தையில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் பி.கீரந்தை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை (08.01.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அரசின் பல்வேறு துறை சாதனை கண்காட்சி, வேளாண், தோட்டக்கலை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி, மருத்துவ முகாம் இடம் பெற உள்ளது. முன் மனு பெறப்பட்டு தேர்வான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது.
Similar News
News February 4, 2026
ராம்நாடு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து பிப்.4ல் செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
News February 4, 2026
ராம்நாடு: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News February 4, 2026
ராம்நாடு: பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

ராமநாதபுரம் மக்களே, இந்த மாசம் ரேஷன் கடையில் பருப்பு, எண்ணெய் இல்லை என்று சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. <


