News March 26, 2025

பி.ஓய் 01 டி.இ., வரிசையில் பேன்சி எண்கள் ஏலம் – ஆணையர் அறிவிப்பு

image

புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பி.ஒய் 05 டிஇ (PY 01 DE) (புதுச்சேரி) வரிசையில் உள்ள வரும் 2ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று (26ம் தேதி) முதல் <>இந்த <<>>இணையதள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். 

Similar News

News April 10, 2025

புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

image

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.

News April 10, 2025

துயரம் நீக்கும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

image

காரைக்காலில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49ஆவது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும் சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம்.

News April 10, 2025

புதுவை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றம்

image

புதுச்சேரியில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏக்கள் வேகமாக செலவிடும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்ய மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியாக, முன்பு ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. இதனை என். ஆர் . காங்கிரஸ்- பா. ஜ. க கூட்டணி ஆட்சியில் இரண்டு கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதனை 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!