News December 20, 2025
பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு அழைப்பு

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் PM Kisan நிதி பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,561 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத 4759 பயனாளிகள் PM Kisan நிதியினை தொடர்ந்து பெற வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News December 21, 2025
தேனி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<
News December 21, 2025
போடி அருகே சோகம் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

போடியை சேர்ந்தவர் பெரிய ஈஸ்வரன் (40). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (டிச.20) அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அங்கு செங்கலை தூக்கிக்கொண்டு இரண்டாவது மாடிக்கு சென்ற நிலையில் அங்கிருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெரிய ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு.
News December 21, 2025
தேனியில் ரூ.2 கோடிக்கு சாலை விரிவாக்க பணி

சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டி- சீப்பாலக்கோட்டை இடையே உள்ள குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. எனவே இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் சுமாா் 1.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தும் பணியில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.


