News January 16, 2025
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தவர் ஆவார். 2021-ஆம் ஆண்டு முதல் திமுக-வில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் சுந்தரம் அவர்கள் பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
நாமக்கல்: மாதம் ரூ.15,000.. வங்கியில் பயிற்சி!

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 14, 2025
நாமக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை (15.08.2025) வெள்ளிக்கிழமை காலை 5:42 மணிக்கு திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல 07331 ஹூப்ளி – காரைக்குடி ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. சுதந்திர தின விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளவும்.
மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்யவும்.
News August 14, 2025
நாமக்கல்: இலவச பிசியோதெரபி முகாம்

திருச்செங்கோடு அடுத்த இளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனையில், பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட காயங்கள், மறுவாழ்வு மையம், மற்றும் ஆராய்ச்சி பிரிவு சார்பில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இலவச பிசியோதெரபி மற்றும் ஆலோசனை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73731-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.