News November 15, 2025
பிஹார் போல தமிழக பெண்கள் செயல்படுவர்: வானதி

பிஹாரில் பெண்கள் அதிகளவு பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதேபோன்ற வெற்றியை தமிழகத்திலும் உறுதியாக எதிர்பார்க்கிறோம். பெண்கள் தெளிவாக முடிவெடுத்துவிட்டால், அவர்களுக்கான அரசை உருவாக்கி காட்டுவார்கள் என்பதற்கு பிஹார் ஒரு உதாரணம். தமிழகத்தில் உள்ள பெண்களும், பாதுகாப்பான தமிழகம் அமைவதற்காக NDA கூட்டணியை தேர்வு செய்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 27, 2026
BREAKING: கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் அறிவிப்பு

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் 5 தொகுதிக்கான தமாகா வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சற்றுமுன் அறிவித்தார். அதில் கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் போட்டியிடவுள்ளார். திமுக&காங்கிரஸ் பலமாக இருக்கும் தொகுதிகளில் தமாகா போட்டியிடுவது பெரும் சவலாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
News March 27, 2026
தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியானது

NDA கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை – கார்த்திகேயன், ஈரோடு மேற்கு – யுவராஜா, ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர், கும்பகோணம் – அசோக்குமார், கிள்ளியூர் – நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த 5 தொகுதிகளில் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
மோடி அழைத்தார்.. நாட்டு மக்கள் அதிர்ச்சி CLARITY

மேற்காசிய போர்ச்சூழல் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து மாநில CM-களுக்கு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதில் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. ஏற்கெனவே, கொரோனா போன்ற சூழல் என மோடி குறிப்பிட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது. ஆனால், லாக் டவுன் என்பது வதந்தியே என இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


