News November 6, 2025
பிஹார் தேர்தல்: மோடி, ராகுல் வேண்டுகோள்

பிஹாரில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிஹார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்முறை வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்று ராகுல் காந்தி வாக்குத் திருட்டை முறியடித்து, விழிப்புடன் செயல்பட்டு பிஹாரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 6, 2025
BREAKING: இந்த கட்சியுடன் விஜய் கூட்டணியா?

தவெக பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிடிவியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தவெக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று பதிலளித்தார். மேலும், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்; அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
தேதி குறிச்சாச்சு.. விரைவில் ரஷ்மிகாவுக்கு கல்யாணம்!

விஜய் தேவரகொண்டா- ரஷ்மிகா மந்தனா இருவருக்கும் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அவர்களின் திருமண தேதி குறித்த தகவலும் வெளிவந்துவிட்டது. அடுத்த வருடம், பிப்ரவரி 26-ம் தேதி, ராஜஸ்தானின் உதய்பூர் மாளிகையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
News November 6, 2025
தனது ஆட்சி பற்றி தானே புகழ்ந்த டிரம்ப்

USA-வில் டிரம்ப் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. இதனை கொண்டாடிய டிரம்ப், தான் வெற்றி பெற்றதன் மூலம் USA-வில் சுயாட்சி மீட்டெடுக்கப்பட்டதாக பேசியுள்ளார். அத்துடன், இந்த ஆட்சியும் மக்களும், பொருளாதாரத்தை காப்பாற்றி, சுதந்திரத்தை மீட்டதன் மூலம், நாட்டையே ஒன்றிணைந்து காப்பாற்றினோம் என தெரிவித்தார். மேலும், நியூயார்க்கில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.


