News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். MGB கூட்டணிக்கு வாக்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே நியாயமாக நடக்காத இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றும், தோல்விக்கான காரணம் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு கடுமையாக முயற்சிப்போம் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
சறுக்கலில் இருந்து சாதனைக்கு

ராம்விலாஸ் பாஸ்வானின் வாரிசு என்றாலும், 2020 தேர்தலில் பெற்ற படுதோல்வி சிராக் பாஸ்வானின் அரசியலுக்கு முடிவுரை எழுதிவிட்டதாகவே பலரும் கணித்தனர். ஆனால், 2024 எம்பி தேர்தலில் பாஜகவிடம் போராடி 5 தொகுதிகள் வாங்கி, ஐந்திலும் வென்று நான் திரும்ப வந்துட்டேன் என்றார். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலிலும் போராடி தான் 29 தொகுதிகள் பெற்றார். அதில் 19-ல் முன்னிலை பெற்றிருக்கிறது சிராக்கின் LJP(RV) கட்சி.
News November 15, 2025
பிஹாரில் 200+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி BJP 89, JD(U) 85, LJP (ராம் விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. MGB கூட்டணியில் RJD 24, காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஓவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.
News November 15, 2025
நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?


