News November 6, 2025
பிஹார் தேர்தல்.. சற்றுநேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்

பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. NDA கூட்டணியில் JDU 57, BJP 48, LJP 14, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. MGB கூட்டணியில் RJD 73, காங்கிரஸ் 24, CPI(ML) 14 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், சுமார் 3.75 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
Similar News
News November 6, 2025
இசையமைப்பாளராக யாரு கரெக்ட்டா சாய்ஸ்?

ரத்தம், அதீத Violence இல்லாத ஒரு ரஜினி படம் 2027 பொங்கலுக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது. காமெடி, சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகப்போகும் ரஜினி- சுந்தர்.சி படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் ஹிப்ஹாப் தமிழாவை கொண்டுவந்தால், சூப்பராக இருக்கும் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க.. இந்த படத்துக்கு யார் கரெக்ட்டான இசையமைப்பாளராக இருப்பாங்க?
News November 6, 2025
அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகலா?

EPS தரப்பிலிருந்து ஒரு சிலர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக செங்கோட்டையன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். யார் பேசுகிறார்கள் என்ற பெயர் விவரத்தை சொல்ல முடியாது; அது அவர்களுக்கு ஆபத்தாகிவிடும் எனவும் கூறியுள்ளார். இதனால், தற்போது EPS பக்கம் இருக்கும் சிலர், எந்த நேரத்திலும் செங்கோட்டையன் பக்கம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதனால், கட்சியினர் செயல்பட்டை இபிஎஸ் தீவிரமாக கண்காணிக்க இருக்கிறாராம்.
News November 6, 2025
டெல்லியிடம் ராமதாஸ் வைக்கும் டிமாண்ட்?

பாமகவில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. அப்போது, எந்தப் பக்கம் கூட்டணி சென்றாலும் 20 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒப்புக்கொண்டு அதை எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என ராமதாஸ் கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி டெல்லிக்கு பச்சை சிக்னல் காட்டியிருக்கும் ராமதாஸ் தரப்பு, அதுதொடர்பான பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக உள்ளதாக தைலாபுர வட்டாரத்தினர் கூறுகின்றனர்.


