News November 15, 2025

பிஹார் தேர்தல் அனைவருக்கும் பாடம்: ஸ்டாலின்

image

JD(U) தலைவர் நிதிஷ்குமாருக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேஜஸ்வி யாதவ்வின் பிரசாரத்தையும் அவர் பாராட்டியுள்ளார். பிஹார் தேர்தல் அனைவருக்குமான பாடம் என்ற ஸ்டாலின், ECI-யின் தவறான, பொறுப்பற்ற செயல்களை பிஹார் முடிவுகள் மூடிமறைத்துவிடாது என்றும் விமர்சித்துள்ளார். மேலும், INDIA கூட்டணி தலைவர்கள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

தூய்மை பணியாளர்களை கைகூப்பி வணங்கிய CM

image

சென்னை தூய்மையாக இருக்க தூய்மை பணியாளர்கள் தான் காரணம் என CM ஸ்டாலின் பேசியுள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த அவர், இரவில் தூக்கத்தை தியாகம் செய்து வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவர்கள் செய்வது வேலை அல்ல, சேவை என்று கூறிய அவர், அவர்களுக்கு நன்றி தெரிவித்து கைகூப்பி வணங்கினார்.

News November 15, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி

image

மறைந்த இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல் கோடம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல் ஆளாக வந்து நடிகர் வையாபுரி அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, இயக்குநர்கள் செல்வமணி, விக்ரமன், பேரரசு மற்றும் காமெடி நடிகர்கள் வரிசையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னணி நடிகர்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 15, 2025

முதலில் MP, இப்போது MLA ஆஃபரா?

image

கூட்டணி குறித்து பிரேமலதா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், திமுக, அதிமுக என 2 கட்சிகளும் விஜய பிரபாகரனுக்கு MLA சீட் என்ற ஆஃபரை முன்வைப்பதாக பேசப்படுகிறது. முன்னதாக MP சீட் விஷயத்தில் ஏமாற்றம் அடைந்ததை நினைவில் வைத்திருக்கும் பிரேமலதா, எதுவாக இருந்தாலும் அதை எழுத்துப்பூர்வமாக தரும்படி கேட்டிருக்கிறாராம். அப்படி தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்றும் கூறியிருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!