News November 5, 2025
பிஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு: கருத்துக்கணிப்பு

பிஹாரில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐஏஎன்எஸ் – மேட்ரிக்ஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், நிதிஷ் தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் பாஜக – 83 -87 இடங்கள், ஜேடியு 61-65 இடங்கள், காங்., 7 -9 இடங்கள், ஆர்ஜேடி 63 -66 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
மறைந்த தமிழ் நடிகர் .. கண்ணீரில் குடும்பம்

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை ‘நாயகன்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. திரையரங்கில் கமல் பட ரிலீஸ் கொண்டாட்டம் என்பது ரோபோ சங்கர் இல்லாமல் முழுமையாகாது. ரோபோ சங்கர் மறைந்துபோனாலும், அவருக்காக நாயகன் பட ரீ-ரிலீஸூக்கான முதல் டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கேட்டு கண்ணீர் விடும் அவரின் குடும்பத்தினர், ரோபோ சங்கர் தற்போது இருந்திருந்தால், திருவிழா போல் கொண்டாடி இருப்பார் என கூறுகின்றனர்.
News November 5, 2025
நியூயார்க் மேயரான இந்திய இயக்குநரின் மகன்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோக்ரான் மம்தானி (34), நியூயார்க் நகரின் மேயராக தேர்வாகியுள்ளார். நியூயார்க் நகரின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்ற அவர், பிரபல திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகனாவார். ஒடிசாவைச் சேர்ந்த மீரா நாயர், ஹாலிவுட் நட்சத்திரம் டென்சல் வாஷிங்டன் நடித்த சலாம் பாம்பே (1988), மிஸ்ஸிசிப்பி மசாலா (1991) உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார்.
News November 5, 2025
சிறுபான்மை நலத்துறை அமைச்சரான Ex.கிரிக்கெட்டர்

தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. MLA தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீனை கடந்த ஆகஸ்ட் மாதமே சட்ட மேலவை உறுப்பினராக பரிந்துரை செய்த நியமனத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. 1984 முதல் 2000-ம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் அசத்திய இவர், 2009- 2014 வரை MP ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


