News November 7, 2025

பிஹார் தேர்தலில் புதிய சாதனை.. 64.66% வாக்குப் பதிவு!

image

பிஹாரில் முதற்கட்டமாக நடந்த 121 தொகுதிகளுக்கான தேர்தலில், 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

Similar News

News February 3, 2026

BREAKING: விஜய் நிகழ்ச்சி.. மன்னிப்பு கேட்டார்

image

தவெக 3-ம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் முன்னிலையில் ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலை பாடகர் வேல்முருகன் பாடியது சர்ச்சையானது. இதனையடுத்து, முருக பக்தர்களின் மனம் புண்பட்டதாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டது. தற்போது, தனது செயலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும், தான் எதார்த்தமாகவே பாடியதாகவும் அதற்கும் விஜய்க்கும் சமந்தமில்லை எனவும் வேல்முருகன் விளக்கமளித்துள்ளார்.

News February 3, 2026

மணிப்பூரின் முதல்வராகிறார் யும்னம் கேம்சந்த் சிங்

image

மணிப்பூரின் புதிய முதல்வராக, பாஜகவின் யும்னம் கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட தொடர் வன்முறை காரணமாக, கடந்த ஆண்டில் முதல்வர் பதவியில் இருந்து பைரன் சிங் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, ஓராண்டாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், மீண்டும் மாநில ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News February 3, 2026

தொகுதி மாறுகிறாரா சீமான்?

image

தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், 2021 தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தை குறிவைத்துள்ளாராம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாகவும், பிப்.21-ல் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!