News November 15, 2025
பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.
Similar News
News April 7, 2026
நான் தொழிலதிபராவேன்.. டிரம்ப் சொல்லும் காரணம்

தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் ஈரானின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏனென்றால், நான் ஏற்கெனவே ஒரு தொழிலதிபர். எனவே, எண்ணெய் வளங்களை கைப்பற்றி தொழிலை பெருக்குவேன், இது முன்னதாக வெனிசுலாவில் செய்தது தான் என்றும் கூறியுள்ளார். போரில் வெல்பவருக்கே பரிசு (எண்ணெய்) கிடைக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
News April 7, 2026
MI vs RR: ஹர்திக் பாண்ட்யா களமிறங்குவாரா?

குவஹாத்தியில் நடைபெறும் இன்றைய போட்டியில் MI – RR அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் RR விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி, 2 போட்டிகளில் 1 தோல்வி என MI அணியும் உள்ளது. இந்நிலையில், 2-வது வெற்றியைப் பெற MI அணி போராடும். அதேபோல், தொடர் வெற்றியைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேற RR அணி டஃப் கொடுக்கும். காயத்தால் ஓய்வில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, இந்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 7, 2026
குடும்பம் vs துரோகம் vs தற்குறி.. இதுதான் பிரசார களமா?

2026 பிரசார களம், எதிரணியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையே முதன்மையாக கொண்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிமுகவை முரட்டுஅடிமை, சங்கி கூட்டம், துரோகம் என திமுகவும், பண்பாடு இல்லாத குடும்பம், பால்டாயில், நடிகை என்று திமுகவை அதிமுகவும் விமர்சிக்கிறது. இவ்விரு கட்சிகளும் இணைந்து தற்குறி என்று தவெகவை வசைபாடுகின்றன. இந்த 3 கட்சிகளையும் நாதக கடுமையாக தாக்கி பேசுவதாக கூறுகின்றனர். உங்கள் கருத்து?


