News November 11, 2025
பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
Similar News
News April 5, 2026
காதல்.. நடிகை த்ரிஷாவின் புதிய POST

விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷா காதலை குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில், ‘எல்லாம் காதல் இல்லை. ஆனால், காதல் இல்லாவிடில் எதற்கும் அர்த்தம் இல்லை’ என்ற போட்டோவை ஷேர் செய்து, அதற்கு ‘உண்மை’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார். எந்த விஷயத்தை மேற்கோள் காட்டி த்ரிஷா பதிவிட்டுள்ளார் என்பதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. என்னவா இருக்கும்?
News April 5, 2026
மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி: EPS

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணியின் ஆட்சி இருந்தால்தான் புதுச்சேரி மக்களுக்கு நன்மை கிடைக்கும் என EPS தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், இரு இடங்களிலும் வெவ்வேறு கட்சிகள் இருந்தால் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி கிடைக்காது என கூறியுள்ளார். NDA ஆட்சிக்கு வந்தால் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிதி உயர்த்தி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
News April 5, 2026
இந்த கம்பெனிகளின் Full Form தெரியுமா?

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களின் Full Form நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ✦TVS: திருக்குறுங்குடி வேங்கராம் சுந்தரம் ✦DLF: டெல்லி லேண்ட் & ஃபைனான்ஸ் ✦HDFC: Housing Development Finance Corporation ✦ICICI: இண்டஸ்ட்ரியல் கிரெடிட் & இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ✦MRF: மெட்ராஸ் ரப்பர் பேக்டரி ✦Paytm: PAY Through Mobile. இது போல உங்களுக்கு தெரிந்தவற்றை கமெண்ட் பண்ணுங்க.


