News November 8, 2025
பிஹாரில் 160 இடங்களில் வெற்றி உறுதி: அமித்ஷா

பிஹார் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு SIR பணிகளே காரணம் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் NDA கூட்டணிக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய அவர், குறைந்தபட்சம் 160 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News November 9, 2025
காரத்தே மாஸ்டராக மாறிய அன்புமணி

சென்னையில் உலக அளவிலான கலை கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புமணிக்கு கெளரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் கராத்தே உடையுடன் பங்கேற்று பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி இனிமேல் தற்காப்பு கலைகளை காற்றுக் கொள்வேன் என தெரிவித்தார். மேலும், தங்களது ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் PT period இருக்கும் என்றும் கூறினார்.
News November 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 9, 2025
பாக்., ராணுவத்தில் முக்கிய மாற்றம்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிடம் பாடம் கற்ற பாகிஸ்தான், அதன் அடிப்படையில் ராணுவத்தில் புதிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி (CDS) பதவியை போல, ஒரு தலைமை தளபதி (CDF) பதவியை உருவாக்க உள்ளது. இதன்மூலம், தற்போது பாக்., அரசு & அதிபரிடம் உள்ள ராணுவத்தின் மீதான அதிகாரங்களும் CDF-க்கு மாற்றப்படும். தற்போதைய தளபதியான ஆசிம் முனீர் CDF ஆக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


