News November 7, 2025
பிஹாரில் அதிகபட்சமாக 64.66% வாக்குப்பதிவு

பிஹாரில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI அறிவித்துள்ளது. இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது. SIR நடவடிக்கை, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையே இதற்கு காரணம் என தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
Similar News
News November 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 7, ஐப்பசி 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.450 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 09:00 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News November 7, 2025
கார்த்திகாவுக்கு ₹1 லட்சம் வழங்கிய லோகேஷ் கனகராஜ்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா தங்க பதக்கம் வென்றார். எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்த அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.
News November 7, 2025
பாக். தளபதிக்கு அதிக அதிகாரம்

பாகிஸ்தானை ஆள்வது PM ஷெபாஸ் ஷெரீப் அல்ல, ராணுவ தளபதி அசிம் முனீர் தான் என்று எதிர்கட்சித் தலைவர் இம்ரான்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி முனீருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய ஆளுங்கட்சித் தயாராகி வருகிறது. ஏற்கெனவே அரசியலில் ராணுவ தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்த திருத்தத்தால் ராணுவத்தின் கை மேலும் ஓங்கும்.


