News November 22, 2024

பிள்ளைகளுக்காக உணவை குறைத்த 25% பெற்றோர்!

image

கனடாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் 25% பெற்றோர் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. Salvation Army என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கனடாவில் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வாடகை, மளிகையின் விலை அதிகரித்துள்ளது. இதனால் 90% மக்கள் தங்களது மளிகை செலவைக் குறைத்துள்ளனர். 1-4 பெற்றோர் பிள்ளைகளுக்காக உணவைக் குறைத்துள்ளனர்.

Similar News

News December 11, 2025

2-வது T20: கில்லா? சஞ்சுவா?

image

SA-வுக்கு எதிரான 2-வது T20-ல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய துணை கேப்டன் கில், முதல் T20-ல் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதே நேரத்தில், சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய சஞ்சுவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கலாமே என்ற கோரிக்கை வலுத்துள்ளது. துணை கேப்டனை மிஞ்சி சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

News December 11, 2025

பெண்களே சருமம் பொலிவா இருக்கணுமா? இத குடிங்க!

image

பெண்கள் எப்போதும், சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என நினைப்பர். அதற்கான ஒரு அற்புத பானம் தான் உலர் திராட்சை நீர். இரவு முழுவதும் நீரில் உலர் திராட்சையை ஊறவைத்து, அந்த நீரை மறுநாள் காலை குடித்து வந்தால், *சருமத்திற்கு இயற்கை பளபளப்பினை கொடுக்கும் *பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளின் அடையாளத்தை குறைக்கும் *நல்ல தூக்கத்தை வழங்குவதால், சருமம் பொலிவாக காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

News December 11, 2025

திமுக எஃகு கோட்டை: வைகோ

image

திமுகவை யாரும் அசைக்க முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். அமித்ஷா கர்வத்தோடும், அகந்தையோடும் திமுகவை துடைத்தெறிவோம் என கூறி வருகிறார்; ஆனால் அவரைவிட 1000 மடங்கு பலம் கொண்டவர்களாலேயே திமுகவை இதுவரை அசைக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ரத்த தியாகத்தில் வளர்ந்த இயக்கம் திமுக எனவும், அந்த எஃகு கோட்டையை யாராலும் உடைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!