News November 1, 2025
பிளாஸ்டிக் பாட்டில்களை தவிருங்கள்: சித்தராமையா

பிளாஸ்டிக் பாட்டில்களை அரசு அலுவலகங்கள் & நிகழ்ச்சிகளில் தவிர்ப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக CM சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக சுற்றுச்சூழலை காக்கும் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். ‘Nandini Products’ என்ற உள்மாநில உற்பத்தி பொருள்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்திலும் மீண்டும் மஞ்சள் பை, அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 1, 2025
தமிழக காவல் துறையில் புதிய பதவி

தமிழக காவல் துறையில் புதிதாக ‘செய்தி தொடர்பாளர்’ என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு முத்தரசி IPS நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டம், ஒழுங்கு உதவி ஐஜியாக உள்ள இவர், சென்னை செய்தி மக்கள் தொடர்பு SP ஆக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை தொடர்பான அறிக்கைகள், புகார்கள் குறித்த நிலவரங்கள் ஆகியவற்றை ஊடகங்களை சந்தித்து வழங்கும் பணியை இவர் செய்வார்.
News November 1, 2025
தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

சமீப காலமாக அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், சில நேரங்களில் தலைவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். தான் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால், தனிக்கட்சி தொடங்குவது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார். அதேநேரம், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
News November 1, 2025
எடை குறைய காலையில் இத 1 நிமிடம் பண்ணுங்க!

High Knees செய்வதால் கால் தசைகள் வலுப்பெற்று, ஒட்டுமொத்த உடல் எடையும் குறைய உதவுகிறது ★செய்வது எப்படி: முதலில் நேராக நிற்கவும். ஒரு காலை மடக்கி, முட்டியை மார்பு உயரம் வரும்படி உயர்த்தவும் ★பிறகு மறு காலை, அதேபோல் செய்யவும் ★இவ்வாறு இரு கால்களையும் மாற்றி, ஓடுவது போல தொடர்ந்து செய்யவும் ★தொடக்கத்தில் தினமும் 1 நிமிடம் வரை செய்து பழகி, பின்னர் மெதுவாக முடிந்தளவு நேரத்தை அதிகரிக்கலாம். SHARE IT.


