News March 4, 2025

பிளஸ் 2 தேர்வில்  206 பேர் ‘ஆப்சென்ட்’

image

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Similar News

News December 31, 2025

தேனி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <>விண்ணப்ப<<>> படிவத்தை நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 31, 2025

தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News December 31, 2025

தேனியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!

image

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் சுருளிராஜ் (70). இவருக்கு சுகர், பிரசர் இருந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போடியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுருளிராஜ் வரும் வழியில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.30) அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!