News February 27, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 27, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 622 ▶குறள்: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். ▶பொருள்: எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அறிவுடையவர்கள் மனம் தளராமல் அதை எதிர்கொள்ளும் வழியை சிந்திக்கும் போதே, அத்துன்பம் விலகிப் போய்விடும்.

News February 27, 2026

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்

image

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம். பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலிபான்கள் எல்லையில் உள்ள 15 சோதனை சாவடிகளை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல் 40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். நடந்து வரும் எல்லை மோதல்கள் இருநாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

News February 27, 2026

ஓட்டுநர் உரிம முறையில் மாற்றங்கள்..!

image

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த கிரேடு அடிப்படையிலான ஓட்டுநர் உரிம முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிவேகம், மது போதையில் ஓட்டுதல் போன்ற காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் 1.8 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே, விரைவில் புதிய முறையை கொண்டுவருவோம் என்றும் போக்குவரத்து விதிகளை மீறினால் பாயிண்ட்ஸ் குறைக்கப்பட்டு வரும் என்றும் மத்திய அமைச்சர் கட்கரி கூறியுள்ளார்.

error: Content is protected !!