News February 24, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News February 27, 2026
ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க ED-க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த பிப்.10-ம் தேதி இதற்கான அனுமதியை பெற்ற ED, அந்த உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தால் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. பண முறைகேடு தொடர்பாக அவர்மீது 2 வழக்குகள் உள்ளது.
News February 27, 2026
8 மணி நேரம் தூங்கினாலும் சோர்வாக இருக்கிறதா?

இன்றைய வேகமான வாழ்க்கையில் தூக்கமின்மை அதிகரித்து வருகிறது. 8 மணி நேரம் தூங்கினாலும் சோர்வாக இருக்கிறதா? அது ஆழ்ந்த தூக்கக் குறைபாடு என டாக்டர்கள் கூறுகின்றனர். தூக்கம், உடலை பழுதுபார்த்தல், ஆற்றல் சேமித்தல், நினைவுகளை ஒழுங்கமைத்தல் போன்ற அத்தியாவசிய செயல்களை செய்கிறது. இரவு சிறந்த தூக்கத்திற்கு மது, கனமான உணவு, மொபைல் பயன்பாடு ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம்.
News February 27, 2026
வரலாற்றில் இன்று

*1964 – சாய்ந்த கோபுரம் மேலும் சரியாமல் பாதுகாக்க இத்தாலிய அரசு உதவி கோரியது. *2002 – கோத்ரா ரயில் எரிப்பு. *2010 – சிலியில் 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர். *1943 – இந்திய அரசியல்வாதி பி.எஸ்.எடியூரப்பா பிறந்த தினம். *2008 – தமிழக எழுத்தாளர் சுஜாதா இறந்த நாள்.


