News January 31, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 10, 2026

கேசவ விநாயகத்தின் பொறுப்பில் பிரஷோப குமார்?

image

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளாக அப்பொறுப்பிலிருந்த கேசவ விநாயகம் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டார். அதன் <<19095269>>பின்னணியில் அண்ணாமலை<<>> கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில், RSS-ன் வட தமிழக அமைப்பாளராக இருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

News February 10, 2026

FLASH: லிபியாவில் படகு கவிழ்ந்து 53 அகதிகள் பலி!

image

ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் பயணித்த ரப்பர் படகு லிபியா கடற்பரப்பில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத படகில் பலர் பயணித்ததே விபத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவுக்கு செல்ல அகதிகள் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில், 2026-ல் மட்டும் கிட்டதட்ட 500 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

News February 10, 2026

20 வயதில் திருட்டு.. 60 வயதில் அரெஸ்ட்டு!

image

ம.பி.,யில் 60 வயது முதியவரை திடீரென போலீசார் கைது செய்துள்ளனர். என்ன குற்றம் என விசாரித்தவர்களுக்கு கிடைத்த பதில்தான் பேரதிர்ச்சி. 1980-ம் ஆண்டில் அவர் 20 வயது இளைஞராக இருந்தபோது, 7 பேருடன் சேர்ந்து ₹100 மதிப்பிலான கோதுமையை திருடியுள்ளார். 45 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த அந்த வழக்கில்தான் தற்போது அவர் கைதாகியுள்ளாராம். நல்லா இருக்குயா உங்க டக்கு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

error: Content is protected !!