News January 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News January 24, 2026
விஜய்க்கு திருமா எச்சரிக்கை

கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தவெகவை NDA-வுக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சிலர் கணிக்கின்றனர். இந்நிலையில், தங்கள் கூட்டணியில் இணைய விஜய்க்கு பாஜக அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன், நெருக்கடிக்கு பயந்து விஜய் NDA-வில் இணைந்தால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என எச்சரித்துள்ளார்.
News January 24, 2026
ஆஸி.,யை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் படை இதுதான்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் WPL முடிந்தவுடன், இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் மார்ச் 6-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான அணியை BCCI அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில், ஸ்மிருதி, ஷபாலி, ஜெமிமா, ரிச்சா, அமன்ஜோத் கவுர், உமா செத்ரி, பிரதிகா, ஹர்லீன், தீப்தி, ரேணுகா, சினே ராணா, கிராந்தி, வைஷ்ணவி, சயாலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
News January 24, 2026
திண்டிவனம் மாவட்டத்தை உருவாக்குக: ரவிக்குமார்

விருத்தாசலம், செய்யாறு, பொள்ளாச்சி, ஆத்தூர், கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிதாக<<18938284>> 5 மாவட்டங்கள்<<>> அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திண்டிவனம், செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகளை இணைத்து திண்டிவனத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு விசிக MP ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


