News January 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News January 29, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 29, தை 15 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 12:45 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 29, 2026
ராகுல் – கனிமொழி சந்திப்புக்கு காரணம் இவரா?

சமீபத்தில், திமுக இதுவரை தங்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவே இல்லை என TN காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அடாவடி அணுகுமுறை காரணமாகவே யாரும் பேச வேண்டாம் என ஸ்டாலின் கட்சிக்குள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், இனி தொகுதி பங்கீடு குறித்து நேரில் பேசிவிடலாம் என்ற முடிவின்படியே, ராகுல் – கனிமொழி பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.
News January 29, 2026
சென்சார் விதிகளை பின்பற்ற வேண்டும்: சவுந்தர்யா ரஜினி

தணிக்கை வாரியம் இன்றோ, நேற்றோ புதிதாக உதயமான அமைப்பல்ல. அது மதிக்கப்பட வேண்டும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும்,ரசிகர்களுக்கு எந்த மாதிரியான படங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அந்த தணிக்கை வாரியமே முடிவு செய்கிறது என்றும், இந்தியாவில் சினிமா படங்கள் சென்சார் வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் வழக்கம் எனவும் பேசியுள்ளார்.


