News January 2, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News February 14, 2026
T20 WC: ஓமனை துவம்சம் செய்த அயர்லாந்து

கொழும்புவில் நடந்த இன்றைய T20WC ஆட்டத்தில் அயர்லாந்திடம் ஓமன் அணி படுதோல்வி அடைந்தது. அயர்லாந்து நிர்ணயித்த 236 ரன் இலக்கை விரட்டிய ஓமன் 139 ரன்களில் ஆட்டமிழந்தது. கலீம் (50), மிர்ஸா (46) இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அயர்லாந்து தரப்பில் கேப்டன் டக்கர் 51 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
News February 14, 2026
இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்.. ஆச்சரியம்

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது?
News February 14, 2026
ஆதாரின் வடிவம் மாறப் போகிறது

ஆதார் கார்டு விரைவில் புதிய வடிவத்துக்கு மாறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர், முகவரி, ஆதார் எண் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டு, போட்டோ & QR கோட் மட்டுமே இடம்பெறும். இதனால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பது தடுக்கப்படும். QR கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த விவரங்கள் தெரியும். இதனால், இதை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என UIDAI கருதுகிறது.


