News December 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News December 28, 2025
2 நாள்களில் முடிந்த ஆஷஸ்.. ₹60 கோடி நஷ்டமா?

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்ட், 2 நாள்களிலேயே முடிவடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு சுமார் ₹60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது வணிகத்திற்கு மோசமானது மற்றும் ரசிகர்களுக்கும் விளையாட்டுக்கும் நல்லதல்ல என கூறப்படுகிறது. 4-வது டெஸ்டில் 150 ஓவர்கள் கூட வீசப்படவில்லை. 2-வது டெஸ்ட் போட்டியும் 2 நாட்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
முதல்வரை விஜய் நையாண்டி செய்வது தவறு: வேல்முருகன்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனும் ஓடும் என கூறும் விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன் என தவாக தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். கேலி செய்யும் நோக்கில் முதல்வரை சார், அங்கிள் என அழைப்பது சரியல்ல எனவும் சாடியுள்ளார். மேலும் CM-ஐ விமர்சிக்கும் விஜய், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் மதவாத கும்பல்களை கண்டிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 28, 2025
நண்பர் அஜித் என குறிப்பிட்டு பேசிய விஜய்..!

சினிமாவில் நேரெதிர் துருவமாக இருந்தாலும், அஜித் – விஜய் இடையே நல்ல நட்பு உள்ளது. ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ‘நண்பர் அஜித்’ என விஜய் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். நண்பர் அஜித் நடித்த பில்லா மற்றும் காவலன், குருவி என பல படங்களின் ஷூட்டிங் இங்கு நடைபெற்றிருக்கிறது என அவர் தெரிவித்தார். ‘மாஸ்டர்’ பட நிகழ்ச்சியிலும், நண்பர் அஜித் போல் கோட் அணிந்திருப்பதாக விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.


