News December 22, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News December 23, 2025

ரஞ்சித், மாரியின் வலிகளை ஏற்க வேண்டும்: சரத்குமார்

image

பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் படங்கள் சாதியை மையப்படுத்தியவை என்ற விமர்சனங்கள் பற்றி சரத்குமார் பேசியுள்ளார். ஏன் இதை காண்பிக்கிறீர்கள் என்று நாம் கேட்பது அபத்தமானது, அது அவர்கள் அனுபவித்த வலி, அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என தெரிவித்தார். மேலும், அடிமைப்பட்டு இருந்த அவர்களின் வலி இன்னும் அவர்களின் நினைவுகளில் இருந்து அகலவில்லை. எனவே படங்களை படமாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News December 23, 2025

Voter லிஸ்ட்டில் பெயர் சேர்க்க 92,000 பேர் விண்ணப்பம்

image

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், <<18628448>>பெயர்<<>> சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், பெயர் சேர்க்க கோரி 3 நாள்களில் 92,626 படிவங்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அதேநேரம், 1,007 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காக வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீங்க <<18636185>>செக்<<>> பண்ணிட்டீங்களா?

News December 23, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

பள்ளி மாணவர்களின் உற்சாகத்துக்கு இன்று எல்லையே கிடையாது. ஏனென்றால், 1 – 12 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்றுடன் அரையாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. நாளை (டிச.24) முதல் ஜன.4 வரை 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜன.5 அன்றே பள்ளிகள் திறக்கும். எனவே, விடுமுறையை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களுக்காக <<18631046>>சிறப்பு<<>> பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!