News December 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News March 29, 2026
திமுக கூட்டணியை விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் பதிலடி!

கிழிந்த துணியை தைத்து வைத்த மாதிரி திமுக கூட்டணி உள்ளது; அது ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி என விஜய் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அன்பில் மகேஸ், வெறும் துணி இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை; துணியை ஒட்டுப்போட்டு தைத்தால் தான் சட்டை அழகாக இருக்கும், அது தான் திமுக கூட்டணி என கூறியுள்ளார். திருச்சி திமுகவின் கோட்டை என்பதை வரும் தேர்தல் நிரூபிக்கும் எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் மக்களிடம் பதற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை 20% – 50% வரை உயர்ந்தாலும், இந்தியாவில் விலை உயர்வு இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.
News March 29, 2026
மாமனார், மாமியாருக்கு மருமகள் ஜீவனாம்சம் தரணுமா?

கணவன் மறைவுக்கு பின்பும் மாமனார், மாமியாரை கவனித்து கொள்ளும் மருமகள்கள் உண்டு. ஆனால் அது சட்டப்பூர்வ கடமையா, கணவனின் பெற்றோருக்கு மருமகள் கட்டாயம் ஜீவனாம்சம் அளிப்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மகனை இழந்த முதிய தம்பதி, மருமகளிடம் ஜீவனாம்சம் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தார்மீக கடமையை சட்டப்பூர்வ கடமையாக செயல்படுத்த முடியாது என்று ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.


