News February 14, 2026
பிரேமலதா மௌனத்திற்கு இதுவே காரணமா?

திமுக அரசு நேற்று மகளிரின் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்ததை, தோல்வி பயத்தில் தருவதாக அதிமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால், இதுகுறித்து பிரேமலதா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். சமீபகாலமாக திமுக ஆட்சி மீதான விமர்சனங்களை குறைத்த அவர், திமுக கூட்டணியில் இணையும் நோக்கில்தான் தற்போதும் மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சிக்கவில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Similar News
News February 19, 2026
தேமுதிக விஷயத்தில் அதிமுக கோட்டைவிட்டது இப்படிதான்

2024-லேயே தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட்டை தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் EPS ஏமாற்றிவிட்டதாக பேசப்பட்டது. இதனால் தேமுதிக நம்பிக்கை இழந்ததாக பேசப்பட்டது. இந்நிலையில் 2026 தேர்தலுக்கு 1 MP சீட்டுக்கு கிரீன் சிக்னல் விழுந்திருப்பதால் திமுக-தேமுதிக <<19181870>>கூட்டணி<<>> உருவாகியிருக்கிறது. அந்த 1 MP சீட்டை அப்போதே ஒதுக்கியிருந்தால் அதிமுகவுக்கு இப்பின்னடைவு ஏற்பட்டிருக்காது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 19, 2026
புதிய கட்சியை அறிமுகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், MGR அதிமுக என்ற தனது புதிய கட்சியை அறிமுகம் செய்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் தொடங்கியுள்ள இந்த புதிய அமைப்பு தேர்தலுக்கானது அல்ல; மக்களுக்கானது என்றார். 1977-ல் MGR-ன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவர், அண்ணாதுரை, ஜெயலலிதா, விஜயகாந்த், OPS ஆகியோருடன் பயணம் செய்தவராவார்.
News February 19, 2026
தேர்தலில் போட்டியா? திவ்யா சத்யராஜ்

திமுக அரசு அளித்துள்ள மகளிர் உரிமை தொகை ரொம்ப நல்ல விஷயம் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், தான் தேர்தலில் வெல்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணி செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன் என கூறினார். அதேநேரம் தேர்தலில் எல்லோருடனும் சேர்ந்துகொண்டு மக்கள் பணி செய்ய உள்ளதாகவும் பேசியுள்ளார். தற்போது திமுகவின் ஐடி விங் துணை பொதுசெயலாளராக திவ்யா சத்யராஜ் உள்ளார்.


